தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்தது. புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 1986க்கு பின்பு சாத்தான்குளம் பகுதியில் பெய்த கன மழை இதுவே. அமுதுண்ணாக்குடி கருமேனியாற்று பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கலுங்குவிளை வழியாக முனைஞ்சிப்பட்டி செல்லும் பஸ்கள் மாலை முதலே நிறுத்தப்பட்டன.
பேரூரை சுற்றி ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் தளும்பிச்சென்றது. பேய்க்குளம் பகுதி கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது.