திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
ஜமுனாமரத்தூர் மற்றும் வேப்பங்குப்பம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறானூர் மற்றும் நெக்கினி மலைப்பகுதியில் உள்ள நெக்கினி ஓடையில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதற்காக தயார் செய்து வைத்திருந்த 12,600 லிட்டர் ஊறலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை தலைவர் லோகநாதன், வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஆகியோர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் உள்ளடங்கிய குழுவினர்கள் ரோந்து பணியின்போது கண்டறிந்து தரையில் ஊற்றி அழித்து உபகரணங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு முயற்சித்த கும்பலை தேடி வருகின்றனர்.














