மழைக்கு ஒதுங்கிய சக ஊழியர் மீது பாலியல் பாய்ச்சல் – வாலிபர் கைது

0
460



கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவீந்திர ராவ் .இவரதுமகள் ஆர்த்தி பாய் ( 22) இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு துணிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சேல்ல்மேனாக பணிபுரிந்து வருபவர் அன்பு வேல்.இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

நேற்று முன்தினம்வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மழை பெய்து கொண்டிருந்தது. அப் போது ஆர்த்தி பாயும்,அன்பு வேலும் மழைக்காக கடை அருகே ஒதுங்கி நின்றனர். அந்த நேரத்தில் திடீரென்று அன்பு வேல் ஆர்த்தி பாயை கட்டிப் பிடித்தார். இதை தடுத்த ஆர்த்தி பாயை தாக்கி, பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றார். அப்போது ஆர்த்தி பாயை சரமாரியாக தாக்கினார்.

அன்புவேல் நடத்திய தாக்குதலில் ஆர்த்தி பாய் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பு வேலை இன்று கைது செய்தனர். அவர்மீது கொலை மிரட்டல் கற்பழிப்பு முயற்சி,தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here