கோவை காந்திபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் விவேகானந்தன். இவரது மனைவி இந்திராணி. இவர் கோவையில் பெண் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சூலூருக்கு சென்றிருந்தார் நேற்று இரவு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர் .
இதுகுறித்து ஏட்டு இந்திராணி காட்டூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் ஏட்டு ஒருவர் வீட்டில்நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.எப்போதும் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் குடியிருப்பில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













