நாசரேத் பேரூராட்சி tமணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் பல ஆண்டுகள் பழுதடைந்த சாலைகளை பராமரிக்காத நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மகா சபா சார்பாக நாசரேத் கே வி கே சாமி சிலை பஜாரில் நடைபெற்றது .
நாசரேத் பேரூராட்சியில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை முழுவதும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் பின்புறம் திறந்தவெளியில் கொட்டப்பட்டு . அந்த இடத்திலே தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே குப்பைக் கூடம் அமைத்து வகைவாரியாக பிரித்து முறையாக கையாள வேண்டும்.
குடியிருப்புகள் நிறைந்த மில் ரோட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளிக்கு சென்று திரும்பும் மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தா
மாநில பொதுச் செயலாளர் ராம்குமார், மாநில தலைவர் சுந்தரவேல் சிவசேனா மாநில அமைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டார் கலந்துகொண்டனர்









