என் கணவரை ஜான் பாண்டியன் கட்சியினர் கொல்ல முயலவில்லை – கோவை பெண் தொழிலதிபர் பேட்டி

0
251

.

கோவை பிரஸ் கிளப்பில் இன்று பெண் தொழிலதிபர் பிரியா அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பது அவர்,  ‘ கணவர் தீபக் அரரோ எனது தந்தையின் பண முதலீட்டில் உருவாக்கப்பட்ட துருவ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில்

  

கடந்த 2006 ஆம் ஆண்டு கோவை சக்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4500 ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்தார். .நான் பிபிஎல் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் நாங்கள் எனது குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம். 2006 இல் திருமணம் முடித்த பிறகு 2011ஆம் ஆண்டு வரை எனது தந்தை வீட்டில் தான நானும் தீபக் அரோராவும் வசித்து வந்தோம.

Mதிருமணத்தின் போது எனது பெற்றோர் கொடுத்த நகைகள், பணம் ஆகியவற்றை வைத்து 2009 ஆம் ஆண்டு துருவ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை சொந்தமாக நாங்கள் துவக்கினோம். மேலும் தற்போது விவகாரத்திற்கு உட்பட்டுள்ள இடம் எனது தந்தை எனக்கு வாங்கி கொடுத்த சொத்து. இந்த சொத்தை நான் யாருக்கு வேண்டுமானாலும் விற்க எனக்கு முழு உரிமை உண்டு.

ஆரம்பத்தில் என் மீதும் முழுமையான அன்போடு இருந்து வந்த தீபக் அரோரா, பின்பு வெறுப்புடன் நடந்து கொண்டார்.ஹெல்மெட் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது முதல் எங்களுடைய ஹெல்மெட் மற்றும் இருசக்கர வாகன எக்ஸ்ட்ரா பிட்டிங் பொருள்கள் விற்பனை அதிகரித்தது.

பணம் அதிகம் புழங்கிய சூழலில் தீபக் அரோராவிற்கு மது, போதை மற்றும் பெண்களுடன் தொடர்பு என அவரது பாதை திசை மாறியது.நான் அலுவலகத்தை கவனித்து கொண்டேன். நடிகைகளோடு தொடர்பு ஏற்பட்டு தற்போது டாக்டர் ஒருவரோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் தீபக் அரோரா 2019 ஆம் ஆண்டு என்னை விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்தார்.

நாங்கள் ஒரே வீட்டிலேயே வசிக்கும் பொழுது எனக்கு தெரியாமல் என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து நோட்டீஸ் எனது கைக்கு கிடைக்காமல் அனைத்து மோசடி வேலைகளையும் செய்து வந்தது எனக்கு தெரியவந்தது. இது குறித்து நான் கேள்வி எழுப்பிய பொழுது என் மீது பொய் புகார்கள் கூறிவிட்டு வீட்டை விட்டு தீபக் அரோரா வெளியேறினார். பின்னர எனது பெயரில் உள்ள எனது நிறுவனத்திற்குள் செல்வதற்கும் அனுமதிக்காமல் இருந்து வந்தார்.

எனது நிறுவனத்திற்கு நான் செல்வதற்கு பிரச்சினை செய்ததோடு மட்டுமல்லாமல், எனது நிறுவனத்தில் செக்யூரிட்டி நியமித்ததற்காக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தீபக் அரோரா என்மீது மற்றும் ஊழியர்கள் மீது பொய் புகார் அளித்து எப்ஐஆர் போட செய்தார்.

அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எங்களுடைய மகன் பியுஸ் மீது தனது மொபைல் போனை திருடி விட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து எனது மகனிடம் ஐந்து முறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வந்த போலீஸ் அதிகாரிகள் பெற்ற பையன் மீது இப்படி அபாண்டமாக பொய் புகார் அளிப்பது குறித்து தீபக் அரோராவை கண்டித்து சென்றனர்.

. கடந்த சில ஆண்டுகளாக நான் நிறுவனத்திற்கு செல்லாத சூழலில் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ள சூழலில் செக்குகளில் புரோ நோட்டில் எனது கையெழுத்தை போலியாக போட்டுக் கொடுத்து கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் 16 லட்ச ரூபாயும், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மோசடி செய்தது போல என் மீது வழக்கு தொடர வைத்துள்ளார்.

நான் என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமமான சூழலுக்கு உண்டான நேரத்தில் மணியகாரம்பாளையத்தில் உள்ள எனது இடத்தை 20 லட்ச ரூபாய்க்கு பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்து கடன் பெற்று பெற்றேன். அந்த கடனை கட்ட முடியாத சூழலும் குடும்ப வருமானம் இல்லாத சூழலும் ஏற்பட்டதால் அதை விற்பதற்கு முடிவு செய்தேன்

.அப்போது மதுரையில் உள்ள எனது உறவினர் சதீஷ் மூலம் அவரது குடும்ப நண்பரான தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியனை  சந்தித்தோம். எங்களது பிரச்சனைகளை கேட்டறிந்த அவர் எனக்கும் தீபக் அரோரா விற்கும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் . இதையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தீபக் அரோரா என்னுடன் சமாதானமாக சேர்ந்து வாழ்வதாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு பின்னர் நாங்கள் குடும்பத்தோடு வெளியில் சென்றோம். அதன் பின்னர் மீண்டும் பிரச்சினைகள் அதிகரித்தது. தீபக் அரோரா எந்த விதத்திலும் மாறவில்லை என்பதை அறிந்து நான் விலகினேன்.

பின்னர் எனது கடன் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மணியகாரம்பாளையதிலுள்ள இடத்தை அதற்குரிய விலை கொடுத்து ஜான்பாண்டியன் வாங்கியுள்ளார் .இதில் எந்தவிதமான மிரட்டல், மோசடி நடைபெறவில்லை.

எனது சொத்தை அவருக்கு நான் விற்ற பிறகு குடோன் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து, அதுபற்றி கேள்வி கேட்பதற்காக அவரது கட்சி நிர்வாகிகள் ஜெயராஜ் தலைமையிலான சிலர் சென்றுள்ளனர். அப்போது தீபக் அரோரா உடன் இருந்த அடியாட்கள் ஜெயராஜ் உள்ளிட்டோரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் தீபக் அரோரா உடன் இருந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஜெயராஜ் உள்ளிட்ட 7 பேரை மட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தீபக் அரோரா சரவணம்பட்டி போலீசார் உதவியுடன் அரிவாளால் துரத்தினர், கொலை செய்ய முயன்றனர் என்று போலியான ஒரு புகாரை அளித்து நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக எங்களது கணவன் மனைவி பிரச்சினையில் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் உதவியுடன் சரவணம்பட்டி போலீசார் வேண்டுமென்றே தலையிட்டு ஒருதலைப்பட்சமாக என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் டிஜிபிக்கு புகார் அனுப்பி உள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here