தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார் உடனடியாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.







