சென்னை அடையாறு மேம்பாலம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு மீது மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாலை 2 மணி அளவில் அடையாறு கூவம் ஆறு வழியாக சென்ற லாரி சாலையில் தடுப்புசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானது லாரியில் இருந்த ஆயில் சாலையில் நின்ற மழை நீருடன் சேர்ந்து தண்ணீர் போல ஓடியது.

சிவாஜி மணிமண்டபம் அருகே நிகழ்ந்த விபத்தில் சாலை முழுவதும் உள்ள எண்ணெய் படலத்தால் போக்குவரத்து ஒருவழி சாலையாக மாற்றப்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு அனைத்து கச்சா எண்ணெய்களை அகற்றினர்
தற்போது ஆயில்கள் சாலையிலிருந்து அகற்றப்பட்டதால் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி போன்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் லாரியை அகற்ற தற்போது கிரேன் உதவியுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















