மதுரை கோமதிபுரம் தனியார் மஹாலில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக கூட்டம் மாநில தலைவர் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு அனுமதி பெற மாவட்ட ஆட்சியரிடம் அணுகினால் மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பின்னரே ஆணை பிறப்பிக்கிறார். வருங்காலங்களில் அரசிதழ் பதிவு பெற்ற ஊர்களுக்கு அரசின் அனுமதி கேட்டு கடிதம் கேட்டவுடன் மாவட்ட ஆட்சியரே அனுமதி வழங்கும் விதமாக அரசிதழில் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.












