சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அருகே இன்று இரவு வந்த காரின் முன்பக்கத்தில் லேசாக புகை வந்துள்ளது. காரை ஓட்டி வந்த பாஸ்கரன் என்பவர் உடனடியாக காரை விட்டு இறங்கி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் உதவியுடன் அருகாமையில் இருந்த டீக்கடையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் முன் பக்கம் முழுவதும் தீ மளமளவென பரவியதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் திருவான்மியூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் அலுவலக நேரம் என்பதாலும் பிரதான சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாலும் சென்னை சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்றன.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கரன் என்பதும் நண்பர் ஒருவரை இறக்கிவிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கார் ஆறு மாதங்களே ஆனதாக அவர் தெரிவித்துள்ளார்.













