திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
உதயனின் நண்பர் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த விபின் (19). இவர் நாகர் கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு உதயனும், விபினும், மைலோடு பகுதியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். திங்கள்நகர்- திருவிதாங்கோடு சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இரணியல் அருகே ஆலங்கோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது அவர்களது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடியது.
சிறிது தூரம் ஓடிய நிலையில் மோட்டார்சைக்கிள் ரோட்டோரம் இருந்த வீட்டுச்சுவர் மீது மோதியது. இதில் உதயனும், விபினும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.








