மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 4 பெண்கள் மீட்பு

0
507


கோவை – திருச்சி ரோடு சூலூர் அடுத்த ராவுத்தர் பிரிவு பகுதியில் ஏகே கிங்ஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு அடிக்கடி அதிக அளவில் ஆண்கள் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து இந்த கட்டிடத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன ஸ்பா உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார் .ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதை அடுத்து நவநீதகிருஷ்ணன் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பெயரல் போலீசார் மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர். அப்பொழுது அங்கு இளம்பெண்கள் தங்கி இருப்பதும் ஆண்கள் வந்து பணம் கொடுத்து உல்லாசமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு நடத்திய சோதனையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் கார்த்திக் மற்றும் கோவை பாப்பநாயக்கன் பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மதுரை கனி என்பவரின் மகன் ரெட் சன் (26) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் சமந்தா என்பவரின் மனைவி மௌஸுமி சமந்தா (26 )மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயவேல் என்பவரின் மனைவி சந்தியா (27 )திருப்பூர் செரீப் காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி புவனேஸ்வரி(33) புதுச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி தனலட்சுமி (27) ஆகிய நான்கு பெண்களையும் மெட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here