காளி கோயில் உண்டியலை தனி ஆளாக அபேஸ் செய்த பலே திருடன்

0
701

காளி கோயில் உண்டியலை ஒருவராக திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இன்று காலை வழக்கம்போல் பூசாரி பாலசுப்பிரமணியம் கோயிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள உண்டியல் இருந்த இடம் சேதமடைந்திருந்ததோடு, உண்டியலும் காணாமல் போனதை கண்ட பாலசுப்பிரமணியம், உடனே சம்பவம் குறித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசாரிடமும் கோயில் அறங்காவலர் கார்த்திகேயனிடமும் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து காணாமல் போன உண்டியல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை தனி ஆளாக சுமந்து கொண்டு செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் உண்டியலை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here