தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு அந்த வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். கார், வரவேற்பு அறையில் இருந்த நாற்காலி, ஜன்னல் கண்ணாடி போன்றவை நொறுக்கப்பட்டன.

கன்னியாகுமரிக்கு மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சசிகலா புஷ்பா சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே சசிகலா வீடு நொறுக்கப்பட்ட தகவல் அறிந்து டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தனர் அப்போது அங்கு திரண்டு இருந்த பாஜகவினர், குற்றவாளிகளை அடையாளம் தெரிந்தும் போலீசார் கைது செய்யாமல் இருப்பதாக அவர்களிடம் ஓரிரு மணி நேரத்தில் வீட்டை உடைத்தவர்களை கைது செய்வதாக டிஎஸ்பி உறுதி அளித்தார்.
நேற்று அபிராமி மஹாலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக எச்சரித்து சசிகலா புஷ்பா பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









