தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிக்கையில் கூறியிருந்தார். அதில் அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 10 மணிக்கு கோவையில் மாநகரத் குட்பட்ட பகுதிகளான ரயில் நிலையம், ரயில் நிலையத்தை சுற்றி உள்ள விடுதிகள், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், சுற்றி உள்ள லாட்ஜ்கள், கோவை விமான நிலைய பகுதி,
கோவையில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகள், வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்த பயணிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை 25-க்கும் மேற்பட்ட குழுக்களாக இன்ஸ்பெக்டர் தலைமையில் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆபரேஷன் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நீடித்தது.

இந்த சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள், முன்னால் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், வழிப்பறி ஆசாமிகள், பல்வேறு குற்றவாளிகள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதனால் நேற்று இரவு முழுவதும் கோவை மாநகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணி சோதனையில் ஈடுபட்டதால் முக்கிய குற்றவாளிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர்.














