உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். மிகுந்த கஷ்டத்துக்கு பிறகே போலீசார் சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஒருவழியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சின்மயானந்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்த இளம்பெண் இப்போது திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசியில் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாணவி , ‘நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்த்தின் வக்கீல் சொல்கிறார். அதை பற்றியும் விசாரிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். புகாரை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன மாணவியே இப்போது கைதாகி உள்ளார்.













