கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டையூர் கிராமத்தைச்சேர்ந்தவர் உத்திரகுமார். 108 அவசர ஊர்திகளின் ஓட்டுனராக பனி புரிகிறார்.
இவர் ஓய்வு நேரங்களில் 108 அவசர ஊர்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் விற்றூவந்துள்ளார். போன் செய்தால் போதும் உடனடி டெலிவரி.

இதுகுறித்து எலவனாசூர் கோட்டை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து கொட்டையூர் கிராமத்தைச்சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் அழைப்புக்கேற்ப சாராயப்பாக்கெட்டுகளை விநியோகித்துக்கொண்டிருந்த உத்திரகுமாரை கைது செய்து , 25 சராய பாக்கெட்டுகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.