வெறிச்சோடியது சென்னை விமான நிலையம்

0
942

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையடுத்து விமான பயணிகள் பலா் தங்களது பயணங்களை தவிா்த்து விட்டதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடக்கிறது.

கடந்த மார்ச் மாதம் தொடக்க வாரங்களில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இருந்தன. அதுப்போல் கடந்த ஏப்ரல் 25ந் தேதி நடந்த ஞாயிறு முழு ஊரடங்கின் போது 34 நகரங்களுக்கு 168 விமான சேவை இருந்தது. தமிழக அரசு இ-பாஸ் போன்ற தளர்வுகளை மீண்டும் அமல்படுத்தியதால் பயணிகள் பெரும் அளவில் குறைந்து விட்டனர்.

இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, அகமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்பட 19 நகரங்களுக்கு 42 விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. அதைப்போல, 21 நகரங்களில் இருந்து 43 விமானங்கள் சென்னைக்கு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக 85 விமான சேவை மட்டுமே உள்ளது.

இன்று சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு 2097 பேரும் சென்னைக்கு வந்த விமானங்களில் 1967 பேரும் பயணம் செய்தனர். மேலும் விமான நிலையங்களுக்கு பயணிகள் வாகனங்களில் வர அரசு அனுமதி அளித்திருந்தாலும் பயணிகள் குறைவாக பயணம் செய்தனர்.

ஆந்திரா மாநிலம் கர்னூல் நகருக்கு 2 பேரும் திருச்சி, விசாகப்பட்டினம் நகரங்களுக்கு தலா 10 பேரும் மேற்கு வங்கம் சிலிகுரி நகருக்கு 6 பேரும் பெங்களூருக்கு 6 பேரும் சென்றனர். அதுப்போல் பெங்களூரில் இருந்து 9 பேரும் ஆந்திரா மாநிலம் கர்னூலில் இருந்து 7 பேரும் வந்தனர். இது போல் 10க்கும் மேற்பட்ட விமானங்களில் 10க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்ய இருந்தனர்.

இதற்கு காரணம், கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. அதோடு விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பயணிகளுக்கு கொரோனா நெகடீவ் சான்றிதழ், இ-பாஸ், பயணிகள் கவச உடை அணிந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பயணிகள் விமான பயணத்தை விரும்பாமல் தவிா்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2ஆவது அலை காரணமாக பயணிகள் சேவை குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையம் வெறிசோடி காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here