மார்க்கை வைத்து கோக்கு மாக்கு: மகரிஷி பள்ளி ஆசிரியர் லீலை அம்பலம்

0
507

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் செய்முறை மதிப்பெண்களை வைத்து மாணவிகளை மிரட்டி அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது

போலீசார் விசாரணையில், பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவிகளுக்கு வணிகவியல் பாடத்தை எடுத்து வரும் ஆசிரியர் ஆனந்தன் அந்த பாடத்திற்கான செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து, மாணவிகளை மிரட்டி வந்துள்ளார்.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது பாலியல் தொந்தரவுக்கு இணங்கவில்லை என்றால் வணிகவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு மதிப்பெண்களை போட மாட்டேன் என கூறி மிரட்டி இருக்கிறார்.

சில மாணவிகளிடம் செய்முறை தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாகவும் மிரட்டி பாலியல் தொந்தரவு விஷயம் வெளியே தெரியாமல் செய்து வந்திருக்கிறார் ஆசிரியர் ஆனந்தன் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here