எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதியில் கடந்த 11ஆம் தேதி வாலிபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது அவரை குறித்து போலீசார் விசாரித்த போது அவர் மேல ஈரால் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் என்பது தெரியவந்தது
முருகன் சமூக வலைத்தளத்தில் தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தி இயங்கி வந்தார் அதைப் பார்த்த காஞ்சிபுரம் தாமல் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் அவருக்கு நட்பு அழைப்பு கொடுத்துள்ளார் அவரிடம் ஈரால் ஈரால் முருகன் என் குரலில் பேசி காதல் வயப்படுத்தி உள்ளார்
அதை நம்பிய தாமல் முருகன் காதலர் தினத்தன்று எட்டையபுரத்தில் தனது முகநூல் காதலியை சந்திக்க வந்துள்ளார் அப்போதுதான் அது பெண்ணல்ல ஆணாகிய ஈரால் முருகன் என்பது தெரியவந்தது இதை அடுத்து வெறுப்புடன் திரும்ப முயன்ற முருகனை மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவருடன் ஈரால் முருகன் ஓரினச்சேர்க்கை நடத்தியுள்ளார்.
மேலும் அதை தாமல் முருகனுக்கு தெரியாமல் படம் பிடித்து அவர் ஊருக்கு திரும்பியதும் அவரது கைபேசி எண்ணுக்கு அனுப்பி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதனால் தாமல் முருகன் தன் கைபேசி எண்ணை மாற்றியுள்ளார். ஆனாலும் அவரது பெற்று ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவரது கைப்பேசி எண்ணை பெற்ற ஈரால் முருகன், ஓரினச்சேர்க்கைக்கு வராவிட்டால் தான் எடுத்த வீடியோவை அவரது தங்கை தாய்க்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்
இதையடுத்து கடந்த 11ஆம் தேதி எட்டயபுரம் பகுதிக்கு வந்த தாமல் முருகன் ஈரால் முருகனுடன் மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு சென்றுள்ளார் அங்கு இருவரும் மது அருந்திய போது தாமல் முருகன் தான் கொண்டு வந்த மயக்கமருந்தை மதுவில் கலந்து உயிரால் முருகனை மயங்க வைத்து தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார. நாள் தனது மணி பர்சை சம்பவ இடத்தில் போட்டதால் மாட்டிக்கொண்டார்.












