ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீ சாலைகார சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், தீபாதாரணை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.









