பொள்ளாச்சியில் 17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து பாலியல் உறவு கொண்ட இளம் பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜசேகரன், குருநந்தினி தம்பதி. இவர்களது 17 வயது மகன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் பொள்ளாச்சி நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் மகள் யமுனா( 19) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. தன்னைவிட சிறிய பையன் என்று தெரிந்தும் யமுனா கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி யமுனா 17 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு பழனிக்குச் சென்றார். பின்னர் அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டு கோவைக்கு வந்தனர் .
கோவையில் ஒரு சில இடங்களில் சுற்றிவிட்டு ஈஷா யோக மையத்திற்கு 27 ஆம் தேதி சென்றுள்ளனர். அங்கிருந்து புறப்படும் பொழுது மழை பெய்துள்ளது. இதை அடுத்து செம்மேடு பகுதியில் உள்ள பூட்டியிருந்த கடையின் முன் பகுதியில் ஒதுங்கி உள்ளனர். அப்போது யமுனா சிறுவனிடம் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துள்ளார். மறுநாளான நேற்று சிறுவனுக்கு திடீரென உடல் நலை சரியில்லாமல் போகவே பயந்துபோன யமுனா அவரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
இதற்கிடையே சிறுவனை காணவில்லை என்று அவரது தாயார் குரு நந்தினி பொள்ளாச்சி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துவரப்பட்ட இருந்த தகவலறிந்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது அங்கு சிறுவனை யமுனா அழைத்து வந்திருந்தார்.தொடர்ந்து யமுனாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் யமுனா தன்னைவிட இரண்டு வயது குறைந்த சிறுவனை தெரிந்தே காதலித்ததும் பின்னர் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் வழக்கமாக சிறுமிகளிடம் சில்மிஷம் செய்து போக்சோ சட்டத்தில் ஆண்கள் கைதாகும் சம்பவம் தான் அதிகமாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கோவையில் சிறுவன் ஒருவனை இளம்பெண் கடத்தி சென்ற சென்று திருமணம் செய்து கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












