பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க் முன் காங்கிரசார் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

மதுரை கிரைம்பிராஞ்ச் பகுதியில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து
பெட்ரோல் டீசல் விலையை ஏற்றும் மத்திய அரசின் செயல்பாட்டை விளக்கும் விதமாகமாகக பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












