காலாவதி பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் சாவு

0
299

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:


அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பகுதியில் வசிப்பவர் சின்னாண்டி, இவரது மகன் குணா 13.இவரும், அவரது நண்பருமான செந்தில் மகன் சசிக்குமார், 11. ஆகிய இருவரும் காலாவதியான பிஸ்கட்டை பாக்கெட்டை, வீட்டின் அருகே எடுத்து சாப்பிட்டார்களாம். இதனால், வாந்தி வயிற்றுப் போக்கு இருவருக்கும் ஏற்பட்டது. அவர்களை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே,குணா இறந்து விட்டார். சசிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் இருவருமே அலங்காநல்லூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here