உவரி அருகே சிறுமி கொலை

0
1259

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் வினிஸ்டன். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 குழந்தைகள். அவர்களது 4-வது குழந்தை இளவரசி (12) அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம்  வெளியில் விளையாட சென்ற அவர் மாயமானார்.இதையடுத்து அவளது பெற்றோர் சிறுமியை அவளது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால்  எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வினிஸ்டனின் வீட்டிற்கு அருகே உள்ள திருத்துவம் என்பவரது வீட்டு வளாக சுவர் அருகில் சிறுமி இளவரசி பிணமாக கிடந்தது நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி உடலில் ரத்த காயங்கள் இருந்தன. அவளை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த உவரி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரிகரன் பிரசாந்தும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது.

போலீசார் அப்பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பெயரில் பிடித்து சென்றனர். அவர்களில் ஒருவரை விடுவித்தனர். மற்றொருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here