கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தத்தில் உணவு பதுக்கல் தடுப்பு போலீஸ் அலுவலகம் உள்ளது. இங்கு போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார் ( 40 )இவர் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களையும் ஓட்டி வந்தார் .
இவர், கோவை மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த அய்யப்பனிடம், அவர் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்துவதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க 2 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறும், மாதந்தோறும் ரூ 1000 மாமுல் கொடுக்கவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அய்யப்பன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் .போலீசார் ரசாயன மை தடவிய ரூ2 ஆயிரத்தை அய்யப்பனிடம் கொடுத்து அனுப்பி விட்டு மறைந்து நின்று கண்காணித்தனர். அந்த பணத்தை போலீஸ்காரர் ராஜ்குமாரிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர் .விசாரித்தபோது இதற்கு சப்-இன்ஸ்பெக்டர இருளப்பன் உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.











