ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் துபை, சாா்ஜா,அபுதாபி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர்.
அதில் சென்னை, ராமநாதபுரம்,ஆந்திரா மற்றும் திருச்சியை சோ்ந்த 4 ஆண்கள்,ஒரு பெண் ஆகிய 5 போ் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 10 பாா்சல்களை கைப்பற்றினா். அவைகளை திறந்து பாா்த்து பரிசோதித்தபோது, தங்கப்பசைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
10 பாா்சல்களிலும் 2.55 கிலோ தங்கப்பசை இருந்ததை பறிமுதல் செய்தனா்.அவற்றின் சா்வதேச மதிப்பு ரூ.1.16 கோடி. இதையடுத்து ஒரு பெண் பயணி உட்பட 5 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.