திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். உதவி பேராசிரியை நளினி அதற்கு உதவியாக இருந்துள்ளார்.
மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி தனியாக அழைப்பது, மேக் அப் போட்டுக்கொண்டு வரச்சொல்வது, நெருக்கமாக அமர்ந்து காலோடு காலை உரசுவது என அவர் செய்த பாலியல் சில்மிஷங்களை கல்லூரி நிர்வாகமும் மறைத்துள்ளது. பல்வேறூ கல்வி நிலையங்களில் பாலியல் புகார் எழுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து வக்கீல் ஜெயந்திராணி தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து கமுக்கமாக பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
தகவல் தெரிந்தும் காவல், நீதி துறைகள் கம்மென்றிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பாரம்பரிய கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நிர்வாகத்தினர், பேராசிரியர் பால் சந்திர மோகன், உதவி நளினி மீது காவல்துறை நடவடிக்கை தேவை என்று மாணவர்கள் கோருகின்றனர்.