காவல்துறையினருக்கும் மதுக்கடை பார் நடத்துபவர்களுக்கும் இடையே உள்ள கள்ள உறவை புலப்படுத்துவதுபோல் நேற்று முதல் ஒரு ஆடியோ பதிவு இணைய உலகில் உலா வருகிறது.
அந்த உரையாடலில் திசையன்விளையை சேர்ந்த தி.மு.க வக்கீல் ஜெனிபர், தனது கணவர் நடத்தும் மது பாருக்கு வந்து எச்சரித்த இரு போலீஸ்காரர்களிடம் பேசுகிறார். ஒரு ஆடியோவில் போலீஸ்காரர்களை ஆபாசமாக மிரட்டுகிறார். அதேவேளை, அந்த காவலர் மழுப்புவதை கேட்கையில், அவர் வாழ்ந்த மாமூல் வாழ்க்கை வெளிப்படுகிறது.
ஒருபுறம் காவர்துறையை அம்பலப்படுத்தும் இந்த ஆடியோ, மறுபுறம் அரசியல் சூழலையும் தெளிவுபடுத்துகிறது. வக்கீல் ஜெனிபரை திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பதவிக்கு சபாநாயகர் அப்பாவு பரிந்துரைத்துள்ளதகாவும் தகவல் உள்ளது.
இந்த ஆடியோவில் உள்ள உண்மைகளை காவல்துறை தெளிவுபடுத்தி, குற்றம் யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திசையன்விளை வட்டார மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.