புதூர் அருகே மாட்டுவண்டி போட்டி

0
466

புதூர் ஊராட்சி ஒன்றியம், கந்தசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சின்னையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆடிமாத கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

13 ஜோடிகள் பங்கேற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் முதல் பரிசு ரூ 15 ஆயிரத்தை முஜின்பிரனம் மாமுநயினார்புரம், சுதன் மேட்டூர் மாட்டு வண்டியும், 2வது பரிசு ரூ 13 ஆயிரத்தை சூாியபிரகாஷ் கம்பத்துப்பட்டி மாட்டுவண்டியும், 3வது பரிசு ரூ 11 ஆயிரத்தை விஜயபாண்டி கம்பத்துப்பட்டி மாட்டுவண்டியும்,

4வது பரிசு ரூ 9 ஆயிரத்தை முகமதுகாவான் பூலாங்கால் மாட்டுவண்டியும், 5வது பரிசு ரூ 7 ஆயிரத்தை மதுமிதா ராமச்சந்திராபுரம் அபிநயா அரியநாயகிபுரம் மாட்டுவண்டியும் பெற்றது.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 24 ஜோடிகள் பங்கேற்றது. போட்டியை மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காளிச்சாமி தொடங்கி வைத்தார்.

முதல் பரிசு ரூ 10 ஆயிரத்தை மேலமருதூர் மற்றும் மேல லட்சுமிபுரத்தை சோ்ந்த மாட்டு வண்டி, 2வது பரிசு ரூ 8 ஆயிரத்தை அரசரடி மற்றும் சாயல்குடியை சேர்ந்த மாட்டு வண்டியும், 3வது பரிசு ரூ 6 ஆயிரத்து கே.துரைசாமிபுரம் மற்றும் வீரவரிசாம்பட்டியை சோ்ந்த மாட்டு வண்டியும் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here