தடைசெய்த லாட்டரி விற்பனை: மூவர் கைது, ரூ.5.27பணம், ரூ.5.21சீட்டு பறிமுதல்

0
1098

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் உசிலம்பட்டியை சேர்ந்த ஞானமுருகன் என்பவர் கைது செய்யப் பட்டார் . அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து விநியோகிஸ்தர்களாக செயல்பட்டுவந்ததேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சக்தி, மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் உசிலம்பட்டி நகர போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 லட்சத்தி 27ஆயிரம் ரூபாயும், 5லட்சத்தி 21ஆயிரம் மதிப்பலான லாட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here