நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் அதிமுக சார்பில் ரோகினி என்பவர் போட்டியிடுகிறார். இதனிடையே இன்று ரோகிணியின் மகன் ஹரிஹரனுக்கு திருமணம் நடைபெற்றது.
ஹரிஹரன் திருமணம் முடிந்த கையோடு மணமகள் சத்தியாவையும் கூட்டிக்கொண்டு அவரது அம்மா ரோகிணிக்கு ஆதரவாக 15வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணமக்கள் இருவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எட்வர்ட் சிங் , வள்ளியூர் இளைஞர் பாசறை செயலாளர் கருப்பசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் உடனிருந்தனர்.









