இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்

0
555

நிலவின் மேற்பரப்பில் செயலிழந்த விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த சந்திரயான் -2 மிஷன் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்களின் கூடுதல் ஊதிய உயர்வுகளை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அணிகளில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை துணை செயலர் எம். ராம்தாஸ் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அதில், 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் வரையில் ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜி ஆகியவற்றின் விஞ்ஞானிகள் / பொறியியலாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்திக் கொள்ளும்படி விண்வெளித் துறைக்கு மத்திய நிதியமைச்சகம், செலவீனத் துறை ஆகியவை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின்படி, 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகளும் நிறுத்தப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here