தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலராக உள்ள பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் வரும் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் 16-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் செய்ய வழக்கறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.









