கொரோனாவுக்கு நடன பயிற்சி நோயாளிகள் மகிழ்ச்சி

0
1295


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மருத்துவ கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரனோ சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் பயிலக்கூடிய இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளும், வேறு சில இயற்கைைைை மருத்துவர்களும்

ஒன்றிணைந்து இலவசமாக இயற்கை வழியில் சிகிச்சை அளித்து வருகின்றனர் .

சிரிப்பு சிகிச்சை, கரவொலிஓசை சிகிச்சை, யோகா, சுவாசப் பயிற்சி, இவற்றுடன் ஆவி பிடித்தல், இயற்கை உணவு வழங்கல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய அதிமதுர கசாயம், கபசுரக் குடிநீர், மிளகு பால் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு வழிமுறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நல்லா சிகிச்சைகளையும் விட இங்கு நடக்கும் நடன சிகிச்சை அனைவரையும்்

கவர்ந்துள்ளது.

இந்த நடன மற்றும் சிரிப்பொலி கரவொலி சிகிச்சைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதாகவும், இது போன்ற சிகிச்சை அளிப்பதால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா 1ஆவது அலையின் போது 1426 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பியதாகவும், ஒருவர் கூட இறப்பு இல்லை எனவும், அதேபோல இந்த ஆண்டு 170 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வரை 90 நபர்கள் குணமடைந்து வீடு சென்றதாகவும் 80 நபர்கள் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இயற்கை மருத்துவர்கள் தெரிவித்தனர.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here