சீன அதிபர் ஜி ஜின் பிங்குடனான சந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்பாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சால்வை அணிவித்தும், புத்தகம், பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் கோவளத்துக்கு அவர் செல்கிறார்.