இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா இன்னொரு பதக்க நம்பிக்கை

0
732

83.5 மீ வீசினாலே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று விடலாம் என்ற நிலையில், முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டருக்கு ஈட்டியை வீசி அசத்தியிருக்கிறார். தகுதிச்சுற்றில் முதலிடமும் வகிக்கிறார்.

ஆச்சர்யமில்லை. நீரஜ் சோப்ரா எப்போதுமே 85 மீ க்கு மேல் கன்ஸிஸ்டண்டாக வீசக்கூடியவர்.

ஜெர்மனியை சேர்ந்த ஜோனஸ் வெட்டர் உலக சாம்பியன். 90 மீ க்கு மேல் வீசக்கூடியவர். அவரே 85.64 மீ வீசி இரண்டாம் இடம்தான் பிடித்திருக்கிறார். அதுவும் மூன்றாவது வாய்ப்பிலேயே வீசினார்.

இறுதிப்போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here