பொதுத்துறை வங்கிகள் இணைப்பு _ எண்ணிக்கை 12 ஆக குறைப்பு

0
426

பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்போவதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடையும், செலவினம் குறையும் என்றார்.
அமைச்சர் அறிவிப்பின்படி, பஞ்சாப் நேஷனல், ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கி, யுனைடெட் வங்கிகள் ஒன்றாகவும், கனரா, சிண்டிகேட் வங்கிகள் ஒன்றாகவும், யூனியன் வங்கி, கார்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கிகள் ஒன்றாகவும், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கிகள் ஒன்றாகவும் இணைக்கப்படும்.
இதன்மூலம் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27லிருந்து 12 ஆக குறையும். இணைக்கப்படும் வங்கிகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும், ஊழியர் குறைப்பு இல்லை என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆனால், வங்கிகள் இணைப்பு பெருமுதலாளிகளுக்கே வாய்ப்பாக இருக்கும். எனவே, வங்கி இணைப்பு கூடாது என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் கூறியுள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here