மதுரையில் காரில் வைக்கப்பட்டிருந்த வைர மோதிரத்தை திருடியதாக, ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
இராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். (23)
இவர், தனது திருமண நிச்சியாதார்த்தற்காக,
மதுரை அண்ணாநகரில், உள்ள நகைக் கடையில் வைர மோதிரத்தை வாங்கிக் கொண்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஜவுளிக் கடையில், ஜவுளிகளை எடுத்துகக் கொண்டு, திரும்ப வந்து பார்த்துபோது, காரில் இருந்த வைர மோதிரத்தை காணவில்லையாம்.
இது குறித்து அஜித் அளித்த புகாரின் பேரில், திடீர் நகர் போலீஸார், வழக்குப் பதிவு செய்வதில் பேரில், காவல் ஆய்வாளர் மரியசெல்வம் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், காரில் இருந்த வைர மோதிரத்தை திருடியதாக, மதுரை செல்லூரரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரை, தனிப்படையினர் கைது செய்தனர்.
காணமல் போன வைரம் மோதிரம் மதிப்பு, ரூ. 40 ஆயிரம் ஆகும்.













