மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு, பெண்கள் நல அமைப்பினரிடம் இருந்து தகவல் கிடைத்தது.
இதனிடையே, போலீசார் அப்பகுதியில் கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. உடனடியாக, அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த புரோக்கர்களான, ரமேஷ், சக்தி சரவணன், கார்த்திக், குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த இரு இளம்பெண்களை மீட்டு, தனியார் காப்பகத்தில், ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கண்ட முதற்கட்ட விசாரணையில்,
அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து., பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மேலும்.,
5 புரோக்கர்களையும் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அவர்களிடமிருந்து சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.