நெல்லை மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் 20.08.2019 அன்று சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது அன்றைய தினம் பாளை மாவட்ட நீதிமன்றம் முன்பாக அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது அதன்படி ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பொறுமை காத்து ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த வேண்டும்.
காலை 8 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிபப்படையில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும்.
வாகனங்களில் வருபவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அவற்றை நிறுத்த வேண்டும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டால், அதற்கும் ஒத்துழைக்க வேண்டும். அஞ்சலி செலுத்த ஊர்வலமாக வர அனுமதி கிடையாது. மணி மண்டபம் அமைந்துள்ள பகுதி மாவட்ட நீதிமன்ற வளாக எல்கைக்குள் வருவதால் நீதிமன்ற உத்தரவின்படி விளம்பர பதாகைகள், மற்றும் பிளெக்ஸ் வைப்பதற்கு காவல்துறை , மாநகராட்சி , நெடுஞ்சாலை ,வருவாய்த் துறைகளில் உரிய அனுமதி பெற வேண்டும்









