தீக்குளித்து இறந்த தனது மகளின் சாவில் உள்ள உண்மையை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு மண்டல போலீஸ் ஐ
. ஜி.யிடம் தாயார் ஒருவர் அளித்துள்ளார்.
கோவை அடுத்த கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி சாந்தாமணி( 52 ).இவர் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் 40 ஆண்டு காலமாக கோவையில் வசித்து வருவதாகவும் தனக்கு சரவணன் என்ற மகனும் கலைவாணி என்ற மகளும் இருந்தனர். கணவர் பாலகிருஷ்ணன் இறந்தபிறகு தனியாக வசித்து வசித்து வருகிறேன். தனது மாமனார் ஆறுமுக ஆசாரி கடந்த 1993 ஆம் ஆண்டு இறந்தார் .அவருடைய சொத்துக்களை மாமியார் பங்கஜததின் தம்பி நடராஜன் என்ற மொட்டை ராசு போலி ஆவணங்கள் தயாரித்து காளப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் பெயருக்கு மாற்றினார். பின்னர் தனது மாமனார் உயிரோடு இருந்த பொழுது பொது அதிகாரப் பத்திரம் கொடுத்ததாக போலி ஆவணங்களை பதிவு செய்தனர். இப்படி போலி ஆவணங்கள் மூலம் எனது மாமனாருக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் ஏமாற்றி உள்ளனர்.
.இதுகுறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் எங்கள் குடும்ப நபர்களை அணுகி பிரச்சனைகள் உள்ள உங்களது சொத்துக்களை கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விசித்திரா ஆகியோரிடம் விற்பனை செய்து கொடுக்கிறேன் என்று கூறினார். அப்போது நாங்கள் எங்களது சொத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது என்று கூறியதற்கு ராமச்சந்திரன் மிகுந்த அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்று கூறினார். மேலும் ராமச்சந்திரனும் அவரது மனைவி விசித்திராவும் இது போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலத்தை வாங்கி உள்ளனர் என்று கூறினர்.உடனே திருவண்ணாமலையில் வசித்து வந்த எனது மகள் கலைவாணியிடம் விஷயத்தை கூறினேன் .அவரும் வாரிசு என்பதால் கோவைக்கு வந்து ஆவணங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தார் . நாங்களும் எங்களது குடும்பத்தாரும் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விசித்ரா கேட்ட ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தோம்.
இந்த சொத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளதால் தற்போது முழுமையாக முடிக்க முடியாது என்றும் பிரச்சனைகளை முடித்த பிறகு நானே வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார். ஆனால் கூறிய படி பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்கள். நாங்கள் அதை நம்பி காத்திருந்தோம். இதற்கிடையே ஒரு சில நாட்களில் பணம் தருவேன் என்று கூறிவிட்டு சென்ற ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விசித்ரா எங்களிடம் வெற்று தாள்களிலும் முத்திரைத் தாள்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். பின்னர் நாங்கள் அவர்களை சந்திக்க செல்லும்போது ராமச்சந்திரன் வெளியூர் சென்று இருப்பதாக கூறி வந்தனர்
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராமச்சந்திரன் வீட்டிற்கு எனது மகள் கலைவாணி சென்ற பொழுது ராமச்சந்திரனின் மனைவி விசித்ரா நீங்கள் யார் எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களை யார் என்று தெரியாது என்று கூறினார். மேலும் நாங்கள் எதற்காக உங்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கையொப்பம் போட்டு விட்டீர்கள் என்று கூறி மிரட்டினார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் வந்த எனது மகள் கலைவாணி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் அவளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.தகவல் அறிந்து வந்த ராமச்சந்திரன் தனது அடியாட்கள் மூலம் எங்களை மிரட்டி நாங்கள் கூறுவது போல் கூற வேண்டும் என்று கூறி மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சுடு தண்ணீர் வைக்கும் பொழுது தீ பிடித்து விட்டதாக போலீஸ் எப்.ஐ. ஆரில் மாற்றி பதிவு செய்தார். எங்களது மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவ்வாறே கூறினோம்.
இதற்கிடையே, கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நாங்கள் சேர்த்த சில நாட்களில் இறந்து போனார். எனது மகள் இறப்பதற்கு முன்பு நடந்த விஷயங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் வீடியோ வாக்குமூலமாக பதிவு செய்து அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் அனுப்பி வைத்தோம் . ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது மகள் கலைவாணி இழப்பிற்கு காரணமான நபர்களை நபர்களான தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது மனைவி விசித்ரா, தங்கவேலு ,பைனான்சியர் துரை, மொட்ட ராசு என்கிற நடராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் சாந்தாமணி கூறியுள்ளார்.
இதே போல தனது தாயார் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இறந்துபோன கலைவாணியின் 12 வயது மகன் செந்தமிழ் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.














