தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவரை சிவகாசியிலிருந்து தொடர்பு கொண்ட பால்பாண்டி என்பவர் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய மைக்கேல் அந்தோணி அவரை தனது வயல்வெளி மோட்டார் ஷெட்டுக்கு வரவழைத்தார். அங்கு தனது மகன் செங்குமாருடன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொண்டுசென்றார்.
பால்பாண்டி ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கு கீழும் அதே அளவுள்ள வெள்லை தாளை வைத்து மஞ்சள் ரசாயன திரவத்தை ஊற்றினார். 3 மணி நேரம் கழித்து வெள்ளை நோட்டெல்லாம் ரூபாய் நோட்டாகும் என்றார்.
தந்தையும் மகனும் காத்திருந்தபோது ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக பால்பாண்டி உருவி பதுக்கினார்.
இதற்கிடையே இந்த தகவல் எப்படியோ போலீசுக்கு போய்விட, அவர்கள் வந்து மூவரையும் கைது செய்தனர்.







