கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு பேசிய போது, “மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதழ் பெற்ற இடம் இந்த பள்ளிக்கூடம் தான்.
ஒரு பெண்ணை பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்திலும் அவர் நினைத்து நினைத்து பார்ப்பது முதலிரவு என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரம் நிகழ்வுகளில் நாம் சந்தித்தாலும் சட்டசபை உறுப்பினர் அங்கீகாரம் இப்பள்ளியில் இருந்து வழங்கப்பட்டது என்னால் மறக்க முடியாது” என்றார்.
ஒரு எம்எல்ஏ பெண்கள் மேல்நிலை பள்ளியில்.. அதுவும் மாணவிகள், ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இப்படி பேசியது கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.














