கத்தார் வீரரின் பெருந்தன்மையால் இத்தாலிக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தங்கப்பதக்கம்

0
999

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடந்தது. கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி காலில் அடி ஏற்பட்டதால், வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.

ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம். அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் ” நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்க ” இருவருக்கும் பகிர்ந்தளிப்போம் ” என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் குணத்தை நிரூபித்தார் கத்தார் வீரர் பாஷிம்.

இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான
தருணங்களில் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here