சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப் பட்டிருக்கிறது. அலுவலகத்தின் அக்கவுண்ட் பிரிவு சேதப்படுத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கோவையை சேர்ந்த ராஜேஷ் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய நோக்கம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.















