ஆஸ்திரேலியா உடனான முதல் லீக் போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் படதாப தோல்விக்கு பிறகு, தற்போது மீண்டெழுந்துள்ளது இந்திய ஹாக்கி அணி.
ஜப்பான் உடனான இன்றைய போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவி செய்துள்ளது இந்தியா. குரூப் அட்டவணையில் 2ஆவது இடத்தை தக்க வைத்துள்ளதால் காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.














