ப்ளீஸ் ஒரு கால் பண்ணிக்கிறே ன் ‘ஹெல்ப்’ கேட்டு செல்போன் அபேஸ்

0
1109


கோவை கீரைைை நத்தம் ஹவுஸிங் யூனிட் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (19 ).இவர் நேற்று ராம் நகர் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஒரு துணிக்கடை முன்பு அமர்ந்து இருந்தார் .அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மனோஜ்குமார் இடம் அவசரமாக தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறி செல்போனை கேட்டுள்ளார். மனோஜ்குமார் செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார். போன் செய்வது போல நடித்த அந்த வாலிபர் மனோஜ் குமார் வேறு திசையில் திரும்பிய சமயத்தில் அங்கிருந்து செல்போனுடன தப்பிச்சென்றார் .இதுகுறித்து மனோஜ்குமார் காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.இதேபோல ஹோசிமின் நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் சபரிநாதன். இவர் சிவானந்தா காலனி இந்தியன் பேங்க் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சபரிநாதன் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார் .இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதேபோல பூசாரிபாளையம் நாயக்கர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் தினேஷ் (23 )பிஎன் புதூர் மெட்டல் கம்பெனி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி தினேஷிடம் இருந்த செல் போனை வாங்கி பேசினர். திடீரென அந்த செல்போனை எடுத்துக்கொண்டு அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றார்கள். இதுகுறித்து தினேஷ் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் புகாரின்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here