தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தில் வசித்து வருபவர் லிங்க துரை(44). இவருக் கும் மனைவிபானுமதி க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட் டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி இவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.
இதனால் மனைவியிடம் சேர்க்க கோரி மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்பதால் இன்று சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.

இதையடுத்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார்,,பொதுமக்கள், வியாபாரிகள் சங்க பிரமுகர்கள் அங்கு குவிந்தனர்.அவர்கள் அவரை இறங்கி வருமாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 12 மணி அளவில் டவரில் ஏறிய அவர் சுமார் 2 மணி நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்தார். பின்னர் ஒருவழியாக சமாதான பேச்சுக்கு கட்டுப்பட்டு கீழே இறங்க முயன்றார் .அவரால் முடியவில்லை..எனவே, 2 போலீஸார் டவரில் ஏறி அவரை கஷ்டப் பட்டு ஒரு வழியா இறக்கினர்.இதையடுத்து மேஞ்ஞான புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.









