தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்க உள்ளது அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சாத்தான்குளம்அருகே பண்டாரபுரம் பிறவா வரம் சேகரத்தில் சபை மன்ற உறுப்பினராக இருந்த சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சேகர குரு பிரிண்ட் சாமுவேல் இல்லத்தின் முன்பு முற்றுகையிட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் அங்கு வந்து 2 திரண்டிருந்த அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.








